
இமை இறங்கா இரவுகளும்,
பசி உணராப் பகல்களும், ஓட்டம் குறையாக் கால்களும்,
ஓய்வில்லா அசையும் கரங்களும்,
ஓர் எண்ணம் கொண்ட இதயத்துடன் இனைந்து -
ஒப்பில்லா மாபெரும் "ஆஸ்கர்" நடத்த முனைந்தோம்!
சிகரம் தொட்டு வெற்றியும் கண்டோம்!!
- ஆயினும் -
பழமை வாய்ந்தப் பாசப்பினைப்புகள்,
கட்டித்தழுவிய அந்த தருணங்கள்;
பள்ளிப் பருவத்தை அசைப்போட்ட இதயங்கள்;
தெப்பமெனத் தேங்கிய இரு கண்கள்;
அதை விரல்கள் கொண்டு இறுக்கிப் பிழிய -
வருவது ஒரு சொட்டுக் கண்ணீராயினும்,
அது வீழ்ந்தது எம் பள்ளி மண்ணில் என்று
பெருமைக் கொள்வோம்! பெருமிதம் அடைவோம்!!
- அஷ்சு (Shyam Sundar - 2008 batch)
"எம் பள்ளிக்காக" என பாடுபட்டோருக்கும், பணியாற்ற வாய்ப்பு கிடைக்காததை எண்ணி வருந்தியோருக்கும், இவர்களுக்கு ஆறுதலளித்த அனைவருக்கும் இது சமர்ப்பனம்.